முத்ரா லோன் ஆன்லைனில் apply செய்வது எப்படி? | mudra loan apply
முத்ரா லோன் அல்லது பிரதம மந்திரி முத்ரா யோஜனா லோன் இந்திய மக்களுக்கு குறைந்த வட்டியில் அனைத்து மக்களும் பலன் பெற கூடிய லோன் ஆகும்.
இதை எப்படி வாங்குவது மற்றும் யார் அப்ளை பண்ணலாம் மற்றும் எவ்வளவு வட்டி என்பது பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் 50,000 முதல் 10 லட்சம் வரை லோன் வாங்க முடியும். இதில் சீஷி, கிஷோர் மற்றும் தருண் என்ற மூன்று திட்டத்தின் மூலம் லோன் வாங்க முடியும். சீஷி திட்டத்தின் 50,000 வரை லோன் எடுக்கலாம். கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 முதல் 5 லட்சம் வரை லோன் எடுக்கலாம். தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை லோன் எடுக்கலாம்.
முத்ரா கடன் வழங்கும் வங்கிகள் பொதுத்துறை 27 வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகள் 18 ஆகும். மேலும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தகுதி உடைய வயது 18 வயது முதல் 65 வயது உடைய நபர்கள் வரை கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். தகுதியுடைய தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
பாதுகாப்பு அல்லது அடமானம் தேவையில்லை. கடனுக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் அடையாள சான்று, குடியிருப்பு சான்று, விண்ணப்ப படிவம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகும்.
முத்ரா கடனின் நோக்கம் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும் மற்றும் தனிநபர் வருவாயை பெருக்குவதற்கும் ஆகும்.
இதில் அப்ளை செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment