தூத்துக்குடி சுங்கச்சாவடியில் டிசம்பர் 31 வரை கட்டணம் விலக்கு..! | thoothukudi floods
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி போன்ற மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 பெய்த மழையில் மற்றும் வெள்ளத்தின் காரணமாக நிறைய இடங்களில் தூத்துக்குடியில் பாதிப்பு உள்ளாகி விட்டது. மேலும் இதில் நிறைய வீடுகள் இடிந்து விழுந்து விட்டது. இந்த வெள்ளத்தின் காரணமாக அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிறைய மக்கள் ஸ்கூல், காலேஜ் மற்றும் மண்டபம் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் தண்ணீர் வந்து மற்றும் வீட்டு உள்ளே தண்ணீர் தேங்கி நிறைய சேதங்கள் ஏற்பட்டு விட்டது. இதன் அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் வடக்கே இருந்து நிறைய வண்டிகள் வருவதனால் இதன் காரணமாக டிசம்பர் 31 வரை தூத்துக்குடியில் சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் அதிகமான கால்நடைகள் இறந்துவிட்டது . மேலும் ஒரு சில இடங்களில் மக்கள் உயரிழந்து விட்டனர். தாமிரபரணியின் கடைசி ஆறான முக்காணி கிராமத்தில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இதனால் நிறைய வெள்ள நிவாரண பொருட்கள் டோல்கேட் தாண்டி வருவதால் அவர்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டது என்பதை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவித்தார்.
Comments
Post a Comment