இத தொட்டா உங்க பணம் மொத்தமும் காலி | tneb message alert
இப்போது இந்த குறுஞ்செய்தி தான் அனைவருடைய மொபைலில் வலம் வந்து கொண்டிருக்கிறது. என் பயிர்மான வாரியத்தில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பிய மாதிரி இதை கிளிக் செய்து உங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்துங்கள், இல்லையென்றால் மின்சாரம் உங்கள் வீட்டில் துண்டிக்கப்படும் என்று வருகிறது இதைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
இப்போது இருக்கும் நவீனமான காலத்தில் நிறைய தொழில்நுட்ப மோசடிகள் ஆன்லைன் மோசடிகள் லோன் வாங்கி தருவதாக மோசடிகள் மற்றும் மின்சார கட்டணம் மோசடிகள் இந்த மாதிரி நிறைய மோசடிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் இப்போது அனைவருடைய செல்போனுக்கும் மின் பகிர்மான நிலையத்தில் இருந்து அனுப்பிய மாதிரி குறுஞ்செய்தி வருகிறது.
இந்த குறுஞ்செய்தி உங்களுடைய மொபைலுக்கு வந்து விட்டால் நீங்கள் அந்த லிங்க் கிளிக் செய்ய வேண்டாம். மேலும் அந்தக் குறுஞ்செய்தியின் உள்ள மொபைல் நம்பருக்கு போன் செய்ய வேண்டாம். இதில் நீங்கள் பத்து ரூபாய் செலுத்தினால் போதும் உங்களுடைய மின்கட்டணம் சரி செய்யப்பட்டு விடும் என்று சொல்வார்கள்.
இதற்கு நீங்கள் உங்களுடைய மின் கட்டண எண்ணை ஆன்லைனில் சரி பார்த்து விடுங்கள். நீங்கள் இதற்கு பணம் ஏதும் செலுத்தி விடாதீர்கள். ஏனென்றால் இது ஒரு போலியான குறுஞ்செய்தி. மேலும் உங்களுக்கு அனுப்பப்படுகிற வலைதளம் பாதுகாப்பானதாக இருக்காது. அப்படியும் நீங்க அந்த லிங்க் கிளிக் செய்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் நம்பர் 1930 இந்த நம்பருக்கு போன் செய்து உங்களுடைய பிரச்சனைகளை சொல்லவும்.
இந்த மாதிரி என் பகிர்மான நிலையத்திலிருந்து குறுஞ்செய்தி வருகிற மாதிரி நிறைய போலியான நம்பரில் இருந்து வருகிறது. இந்த நம்பருக்கு நான் தொடர்பு கொண்டால் மறுமுனையில் பேசும் நபர் ஹிந்தியில் பேசுவார். ஆகையால் இதை யாரும் நம்ப வேண்டாம் இந்த குறுஞ்செய்தியை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment