Rbi போட்ட அதிரடி விதிமுறைகள்.. மக்கள் மகிழ்ச்சி.. | rbi new rules for cibil score
Rbi திடீரென்று சிபில் ஸ்கோர் சம்பந்தமாக போட்ட விதிமுறைகள் பற்றி இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாளுக்கு நாள் சிபில் ஸ்கோர் சம்பந்தமாக புகார்கள் வந்த நிலையில் இந்த விதிமுறைகளில் மற்றும் மாற்றங்களை ஆர்பிஐ கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறைகள் ஏப்ரல் 26 ஆம் தேதி 2024 வருடம் அன்று நிறைவேற்றப்பட உள்ளது.
வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் நாம் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிபில் ஸ்கோர் எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்த சிபில் ஸ்கோரை வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் தெரிவிக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது அதை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த விண்ணப்பம் எதற்காக நிராகரிக்கப்படுகிறது என்பதை பற்றியும் காரணத்தை வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும்.
கடன் நிராகரிக்கப்படும்போது அதனுடைய தாக்கம் சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கும் இதனால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கடனுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் கடனை திரும்ப செலுத்த முடியுமா என்று கேள்விகள் எழும்.
வாங்கிய கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தி விட்டால் அவர்களுடைய சிபில் ஸ்கோர் அதிகரிக்கும் இல்லையென்றால் அவர் அவர்களுடைய சிபில் ஸ்கோர் default ஆகிவிடும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை இலவசமாக சிபில் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்று அவர்களுடைய இணையதளத்தில் அதை காட்ட வேண்டும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து தகவல்களையும் எஸ்எம்எஸ் அல்லது இமெயில் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளர்கள் புகார் செய்த நாட்களில் இருந்து வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அந்த புகாரை ஆய்வு செய்து 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் அப்படி இல்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.
Comments
Post a Comment