போலியான லோன் ஆப் கண்டுபிடிப்பது எப்படி ? | fake loan apps list 2023
இன்றைய நவீன காலத்தில் அனைவரும் கையிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. எந்த வகையில் ஏதாவது நமக்கு தேவை வேண்டுமென்றால் நம்முடைய வீட்டிலிருந்தே அனைத்து வசதிகளையும் ஸ்மார்ட் ஃபோனில் பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் இப்போது கடன் வேண்டுமென்றாலும் கூட ஆன்லைனில் எளிமையான முறையில் பெற்றுக் கொள்ள முடியும். இதில் நிறைய போலியான ஆப்கள் உள்ளது இதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
ப்ளே ஸ்டோரில் ஆர்பிக்கு உட்பட்ட loan apps மற்றும் ஆர்பிஐக்கு உட்படாத loan apps என இரண்டு பட்சமாக உள்ளது, இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது. எந்த ஒரு லோன் செயலியில் நாம் பார்த்தால் அதில் ரேட்டிங்ஸ் ரிவ்யூ அந்த கடன் பற்றி தகவல்கள் இருக்கும். இதை வைத்து அந்த கடன் ஆப் நாம் ஆர்பிக்கு உட்பட்ட ஆப் என்று வைத்துக் கொள்ளலாம். மேலும் அந்த கடன் ஆப் பற்றி நிறைய தகவல்கள் மற்றும் அதற்கு கடன் கொடுக்கக்கூடிய லெண்டிங் பார்ட்னர்ஸ் இவர்களைப் பற்றியும் குறிப்பு இருக்கும். இவையெல்லாம் இருந்தால் அது ஆர்பிக்கு உட்பட்ட ஆப் என்று சொல்ல முடியும். மேலும் இதில் கால அளவுகள் 62 நாட்களுக்கு குறையாமல் இருக்கும்.
இதே ஒரு போலியான லோன் ஆப் என்றால் அதனுடைய ரேட்டிங்ஸ் ரிவ்யூ இதை பார்த்தே எளிமையான முறையில் கண்டுபிடிக்கலாம். இந்த லோன் ஆப் ரேட்டிங் மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இதன் ரிவ்யூ மிகவும் மோசமான நிலைமையில் இருக்கும். இந்த கடன் ஆப் பற்றி அவர்கள் கூற மாட்டார்கள். மேலும் இவர்களுடைய லெண்டிங் பார்ட்னர்ஸ் இந்த விவரங்களும் இருக்காது. மேலும் இவர்களுக்கு முகவரி கூட இருக்காது. இந்த கடன் ஆப் பற்றிய தகவல்களும் இருக்காது. இவையெல்லாம் இப்படி இருந்தால் நாம் இதை போலியான கடன் ஆப் என்று வைத்துக் கொள்ள முடியும். இது லோன் கட்டுவதற்கான கால அளவுகள் 7 நாட்கள் மட்டுமே இருக்கும்.
இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும் ஆர்பிக்குட்பட்ட கடன் ஆப் மற்றும் ஆர்பிஐக்கு உட்படாத கடன் ஆப் என்று இவைகளுக்குள் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும்.
Comments
Post a Comment